இலங்கை செய்திகள்

தபால் சேவைகள் தற்கலிக இடைநிறுத்தம்

நாட்டின் நிலவும் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பல பகுதிகளுக்கான தபால் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள், காலியில் உள்ள பிரதான மற்றும் துணை தபால் நிலையங்கள், குளியாபிட்டிய தபால் நிலையம் மற்றும் குருணாகல் மாவட்டத்தின் சன நெருக்கடியாக பகுதிகளில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் மற்றும் பல முக்கிய, துணை தபால் நிலையங்களின் சேவைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளன.

அது மாத்திரமன்றி மத்திய தபால் பரிமாற்றம் மற்றும் தபால் திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Most Popular

To Top