இலங்கை செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று திறக்கப்படும்

கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

எனினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது..

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் இன்று திறந்திருக்கும்.

இந்த வங்கிக் கிளைகளை திறப்பதற்கு தேவையான அலுவலர்கள் தமது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு வருகைத் தர முடியும் என்று கொவிட் 19 வைரசு பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top