இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கான ஆபத்து கூடிய இடங்கள்

இலங்கையில் கொவிட் – 19 நோய்த் தொற்றுக்கான ஆபத்து கூடிய இடங்கள் பற்றிய விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவ அதிகாரிகளின் வகையீட்டுக்கு அமைய இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் பதிவான தகவல்கள் தொடர்பிலான விபரங்களின் அடிப்படையில் இந்த வரைபடத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நோயாளிகளை அனுப்பி வைத்தல் என்பனவற்றின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவை அதி ஆபத்து வாய்ந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடம் 14 நாட்களுக்கான தரவுகள் உள்ளடக்கி தயார் செய்யப்பட்டுள்ளது.

Most Popular

To Top