இலங்கை செய்திகள்

ஆதிவாசிகளின் கிராமம் மூடப்பட்டது!

நாட்டுக்குள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த வசதிகளை கொண்ட வேடுவ மக்களின் பாதுகாப்பு கருதி, இன்று முதல் தம்பான ஆதிவாசிகள் கிராமத்தை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்காக திறப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி வன்னிலா எத்தன் தெரிவித்துள்ளார்.

தம்பானயில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்கள் இன்றி, வேடுவ மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி, ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் உட்பட ஆதிவாசிகளின் கிராமத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top