இலங்கை செய்திகள்

கொட்டாவை மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா

கொட்டாவை – ஹொரணை வீதியில் மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த மீன் விற்பனை நிலையத்தை இன்று மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்தவர் என பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக எல்லாவள தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கொட்டாவை நகரில் மூடப்பட்ட இரண்டாவது வர்த்தக நிலையம் இதுவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இங்கு வந்து சென்று நாடு முழுவதும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டது.

கடந்த 22ஆம் திகதி பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் நடத்திய பரிசோதனைக்கு அமைய இந்த மீன் வர்த்தகருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

இவரது மீன் விற்பனை நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து வீடுகளை சேர்ந்த 11 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top