இலங்கைக்குள் மேலும் 263 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 227 பேர் பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்றாளிகளின் இணைப்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவதளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை,நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் புறக்கோட்டையில் இருந்து பயணிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை, புறக்கோட்டை உட்பட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
