இலங்கை செய்திகள்

நேற்றும் 368 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் நேற்றும் 368 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 215 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள 37 பேருககும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 24 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆக உயர்வடைந்துள்ளது.

3 ஆயிரத்து700 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 ஆயிரத்து 714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

15 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.

Most Popular

To Top