இலங்கை செய்திகள்

கொழும்பின் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொது புதிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்துவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top