இலங்கை செய்திகள்

மஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா: 8 பேர் தனிமைப்படுத்தலில்..!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தின்,  கங்கேவத்த பிரிவிலுள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியாகொடமீன் சந்தையில் பணிப்புரிந்துள்ளார்.

அவ்வாறு பணிப்புரிந்த நபர் கடந்த 17ம்,18ம்,19ம் திகதிகளில் மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தபோது மஸ்கெலியா நகரிலும் சுற்றித்திரிந்து உள்ளதாகவும் அதன் பின்னர் பேலியாகொட திரும்பிசென்ற நிலையில், அவரை நேற்று 23ம் திகதி பரிசோதனை மேற்கொண்ட போது கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால், வவுனியா தனிமைப்படுத்தும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவருகிறது. 

இந்நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் மஸ்கெலியா சுகாதார அதிகாரிகளினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

Most Popular

To Top