இலங்கை செய்திகள்

கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணாமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

திருகோணமலையிலிருந்து – முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என குறித்த மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குறித்த மீனவர்களின் உறவினர்கள் ஊடாக படகு உரிமையாளர் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி முல்லைதீவு மணல் குடியிருப்பு மீனவர் சங்கத்திற்கு கட்டுப்பாட்டு படகில் திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் அலியார் சலீம் (56வயது) மற்றும் முர்சலீன் றில்வான் (34 வயது) எனவும் தெரியவருகின்றது.

இம் மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இன்னும் இவர்கள் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

Most Popular

To Top