இலங்கை செய்திகள்

இலங்கையில் 15வது கொரோனா மரணம்

இலங்கையில் 15வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதய நோய் தொடர்பில் பாதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 15ஆவது மரணம் பதிவாகி உள்ளது.

Most Popular

To Top