இலங்கை செய்திகள்

யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் விடத்தல்பளை மற்றும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை மீனவர்கள் பலர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களில் ஒருவருக்கும், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Popular

To Top