இலங்கை செய்திகள்

கொழும்பு 8இல் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்!

கொழும்பு 8, ரில்லியம் ரெசிடன்ஸின் நான்கு குடியிருப்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரில்லியம் ரெசிடன்சிஸ் அறிவித்துள்ளது.

கொல்ப் விங்க் 6, குடியிருப்பின் 6-9-1இலேயே இந்த நான்கு தொற்றாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரில் குறித்த தொற்றாளிகள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கொரோனா தொற்றாளிகளுடன் இணைப்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ரில்லியன் ரெசிடன்ஸிஸ் அறிவித்துள்ளது.

Most Popular

To Top