இலங்கையில் நேற்று 866 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய ஒருநாள் தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.
முன்னதாக நேற்று மாலை 609 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 496 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களாவர்.
5 பேர் காலி மீன்பிடித் துறைமுகத்தையும், 20 பேர் பேருவளை மீன்பிடித் துறைமுகத்தையும் சேர்ந்தவர்கள்.
48 பேர் தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்தவர்கள். 20 பேர் மினுவாங்கொடை தொற்று நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள்.
ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.
இந்தநிலையில் நேற்றிரவு மேலும் 256 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தையைச் சேர்ந்த 39 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 217 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,153 ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,495 ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 3,644 ஆகும்.
