இலங்கை செய்திகள்

நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் இன்று மட்டும் இதுவரை 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெலியகொட மீன் சந்தை பகுதியில் 39 பேருக்கும், மினுவங்கொடை மற்றும் பெலியகொட தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 217 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,153 ஆக உயர்வடைந்துள்ளது. 

Most Popular

To Top