இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் ஐந்து மீன் கடைகளுக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் இயங்கி வந்து ஐந்து மீன் கடைகள் ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதான மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் கொழும்பு பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்து வந்துள்ளதனை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி இந்த கடைகள் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் கொழும்பு சென்று வந்த இருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஏனைய மீன் கடைகளில் பணிபுரியும் 12 பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு சென்று வந்த இருவருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவ்வறிக்கை வந்த பின் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ராமையா பாலகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top