இலங்கை செய்திகள்

காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர் காவு வண்டி

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவிற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்றை காட்டு யானை மோதித்தள்ளியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மல்லாவி வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை ஏற்றிக் கொண்டு மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியூடாக மாஞ்சோலை வைத்தியசாலை நோக்கி குறித்த நோயாளர் காவு வண்டி பயணித்துள்ளது.

இந்த சமயத்தில் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் நோயாளர் காவு வண்டியினை காட்டுயானை தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் நோயாளர் காவு வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் நோயாளர் காவு வண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Most Popular

To Top