இலங்கை செய்திகள்

அரசாங்கம் உண்மையை மறைத்தமையே எந்த நிலைமைக்கு காரணம் என வைத்திய நிபுணர் எச்சரிக்கை

உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மையான நிலைமையை மறைத்து, மக்களுக்கு சரியான புரிதல்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அச்சம் கொள்ள எதுவுமில்லை எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வந்தததால், கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்த அச்சம் நீங்கியது.

இதனால் தற்போதைய இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போதாவது அரசாங்கம் இந்த வைரஸ் பரவுவது தொடர்பாக உண்மையான ஆபத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Most Popular

To Top