இலங்கை செய்திகள்

காலி மீன்பிடி துறைமுகத்தில் 7 பேருக்கு கொரோனா

காலி மீன்பிடி துறைமுக மீனவர்கள் உட்பட சேவைகளை வழங்கும் நபர்களிடம் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகள் முடிவுகளின்படி 7 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளதாக காலி நகர சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த PCR பரிசோதனை முடிவுகள் இன்று காலை கிடைத்துள்ளன.

காலி மீன்பிடி துறைமுக மீனவர்கள் உட்பட 166 பேருக்கு நேற்று PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

எனினும் பரிசோதனை தொடர்பான சகல முடிவுகளும் இன்னும் கிடைக்கவில்லை, இன்றைய தினம் அவை கிடைக்கும் என வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், இவர்களுடன் பழகியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை நடத்தப்பட்டவர்கள் அனைவரும் ஏனையோருடன் நெருங்கி பழகாது தனியாக விலகி இருக்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Most Popular

To Top