இலங்கை செய்திகள்

பெஹலியகொட மீன் விற்பனை நிலையத்துக்கு சென்ற அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை

பெஹலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வியாபார நடவடிக்கையின் பொருட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து சென்று வந்தவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 25 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நசீர், எம்.ஏ.ஏ.நௌசாத், ஏ.அர்.எம்.ஹக்கீம், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Most Popular

To Top