இலங்கை செய்திகள்

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று இலங்கையை வந்தடைந்தது

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வந்துள்ளதாக கட்டுநாயக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 28ஆம் திகதியன்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ இலங்கைக்கு ஒருநாள் பயணமாக வரவுள்ளார்.

அவரின் பயணத்துக்கு முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இராணுவ அதிகாரிகள் கட்டார் எயார் வெய்ஸூக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருநாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top