இலங்கை செய்திகள்

போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பயணிகள் பேருந்துகளுக்கான தவணை அடிப்படையிலான குத்தகை பணம் செலுத்துகைக்கு 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

இதனை போக்குவரத்துதுறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இல்லையேல் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் இருந்து விலகப்போவதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா நிலைமை மோசமாகுமாக இருந்தால் அமைச்சு நிரந்தர தீர்வு ஒன்றை காண முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top