இலங்கை செய்திகள்

சுங்கத் திணைக்களத்தின் மேலும் 20 அதிகாரிகள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலும் 20 அதிகாரிகள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்ட இரு சுங்க அதிகாரிகள் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் முதற்கட்டமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய 25 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்த நேற்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இன்று மேலும் 20 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top