இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியா – வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கொரிய நாட்டில் இருந்து வருகை தந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு நேற்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மதியம் வெளியாகிய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு இடமாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் கொரியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top