இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மீன் வியாபாரத்தளங்களுக்கும் பூட்டு!

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மீன் வியாபாரத்தளங்களும் இன்று மூடப்பட்டன.

பொது சுகாதார அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் உள்ள மீன் வியாபாரத்தளம் ஒன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் கொரோனா தொற்றாளிகள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்று வந்த நிலையிலேயே நகரில் உள்ள மீன் வியாபார தளங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த சாரதியும் உதவியாளரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார அதிகாரி ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹட்டன் மீன் சந்தையின் வியாபாரிகள் மத்தியில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top