இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா..? இராணுவ தளபதி சவேந்திர சில்வா வழங்கியுள்ள விளக்கம்..!

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு இராணுவ தளபதியும் கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக ஊரடங்கு சட்டம் தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார். மேலும் ஊரடங்கு சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவை யற்ற அச்சம் நிலவுவதாக ஊடக சந்திப்பில் அவர் தெரி வித்தார்.

பகுப்பாய்வு செயல்முறையின் படி ஊரடங்கு சட்டம் தீர் மானிக்கப்படுவதால் தேவையற்ற முறையில் பொது மக் கள் அச்சப்படத் தேவையில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top