இலங்கை செய்திகள்

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்

கொஸ்கம அரச வைத்தியசாலையில் இருந்து இன்று காலை தப்பிச் சென்ற 26 வயதான கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொரள்ள – சாஹஸ்ரபுர தொடர்மாடியில் இருந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைடுத்து அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பி சென்ற குறித்த நோயாளியின் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

To Top