இலங்கை செய்திகள்

சிகிச்சை நிலையத்திலிருந்து ஒரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொஸ்கமவில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து ஒரு கொரோனா நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

26 வயதுடை வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்தபோது தப்பிச் சென்றுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 06.00 மணியளவில் நோயாளி சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top