இலங்கை செய்திகள்

பேலியகொடை கொரோனா தொற்று தொடர்பில் மேலும் 312 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் இன்று!

பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்புகளை பேணிய 312 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தவிர மேலும் அவர்களிடம் தொடர்புகளை பேணிய நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் இதுவரையில் 237 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் மேலும் அவர்களுடன் தொடர்புளை பேணியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 1600 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top