இலங்கை செய்திகள்

மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட லெமன் மோரா தோட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கொழும்பு மெனிங் சந்தையில் சிறு வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இளைஞருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 14 நாட்கள் வெளியில் செல்ல முடியாத வகையில் தனிமைப்படுத்துயுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மஸ்கெலியா லெமன் மோரா தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் கொழும்பில் கொவிட்-19 க்காக மூடப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மஸ்கெலியா பகுதிகளுக்கு வருவோர் தங்களது பெயர்களை அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும்,சுகாதார பிரிவிலும், கிராம சேவகர் பிரிவிலும் பதிவு செய்வதன் மூலம் மலையகத்தில் இந்த நோய் பரவாது தடுக்க முடியும் என சுகாதார உயர் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து சுகாதர அதிகாரி மேலும் கூறுகையில்,

முதல் முறை மலையகத்தில் இவ்வாறான நிலை தோன்றவில்லை. இம்முறை சமூகப்பரவல் என்பதால் அதிகளவு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் வெளியிடங்களில் இருந்து வருவோர்களிடம் சுகாதார முறைப்படி நடந்துக் கொள்ளுமாறும்.

முககவசம் அணியுமாறும், சவரக்காரம் கொண்டு கை கழுவுதல், எச்சிலை மிதிக்கக்கூடாது, என்ற அறிவிறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், அரசின் கட்டளைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Most Popular

To Top