இலங்கை செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பு

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு தேவையான பொருட்களை உறவினர்கள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்ட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கும், அவர்களுக்கு தேவையான பொருட்களை உறவினர்கள் வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறு கைதிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top