மன்னார்- பட்டிதோட்டம் கிராமத்தில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 18 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளுக்கு அமைவாக மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணப் பொதியானது நேற்று மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் ஏ.திலீபன் வழங்கி வைத்துள்ளார்.
மேலும் குறித்த நிவாரணப்பொதியானது தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எஸ்.திலிபன் மற்றும் மன்னார் பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் றொகான் ஆகியோர் குறித்த கிராமத்தின் மாதர் அபிவிருத்தி சங்கத்திடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
