இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம்

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு பிரிவின் பணியாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமையும், தற்காலிக பணியாளர்களை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமையில் ஈடுபட அனுமதிக்காமையின் காரணமாகவே தீயணைப்பு பிரிவின் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவைகள் அவசியம் தேவைப்படின் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் 0779515721

Most Popular

To Top