செய்திகள்

விலகினார் டுவெய்ன் பிராவோ

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரரான டுவெய்ன் பிராவோ ஐ.பி.எல். போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரரான டுவெய்ன் பிராவோ சி.எஸ்.கே. அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பாற்றியுள்ளவராவார்.

ஐ.பி.எல். 2020 ஆரம்பமாகும் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிரான போட்டியின்போது காயம் ஏற்பட்டது.

இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் எஞ்சிய போட்டிகளிலிருந்து பிராவோ விலகியுள்ளதாக அவ்வணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் இன்னமும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Most Popular

To Top