இலங்கை செய்திகள்

மீன் சாப்பிடுவதால் ஆபத்து ஏற்படாது– வைத்தியர்கள் தெரிவிப்பு

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளமையினால் விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பரவல் காரணமாக மீன்களில் வைரஸ் தொற்றியிருக்கும் என்பதற்கு எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் உணவு மற்றும் மீன் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை வரை நாட்டின் 13 மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் கொரோனா பரவுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நாடு முழுவதும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தாம் எதிர்பார்ப்பதாக பிரதான வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top