இலங்கை செய்திகள்

போத்தலில் தண்ணீர் அருந்தியதால் பொலிஸாருக்கு நேர்ந்த கதி

வழக்கு நிறைவடைந்த பின்னர் பானந்துறை நீதவான் நீதிமன்றில் பாணந்துறை – தெற்கு காவற்துறை சார்ஜன்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரி ஆகியோர் ஒரே போத்தலில் நீர் அருந்தியுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவதற்கு பாணந்துறை நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 60 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் திருகோணமலை – மொத்த மீன் விற்பனை நிலையத்தில் 37 வர்த்தகர்களுக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேலியகொடை மொத்த மீன் சந்தையில் நேற்றைய தினம் 49 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர்களுடன் திருகோணமலை மீன் விற்பனையாளர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

Most Popular

To Top