இலங்கை செய்திகள்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இருதினங்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேநேரம் எதிர்க்கட்சியிலிருந்து இதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:

1. ஐ.ம.ச. தேசிய பட்டியல் உறுப்பினர் – டயானா கமகே 

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

3. முஸ்லிம் தேசிய கூட்டணி உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

7. ஐ.ம.ச. உறுப்பினர் அரவிந்த் குமார் 

8. ஐ.ம.ச. உறுப்பினர் இஷாக் ரஹ்மான் 

Most Popular

To Top