கொழும்பிற்கு வாகனங்களில் வரும் நபர்களின் உடல் வெப்பநிலை அளவீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் ராஜகிரிய பிரதேசத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இராணுவத் தலைமையகத்தின் மோட்டார்சைக்கிள் பிரிவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எழுமாறான அடிப்படையில் கொழும்பு பிரதேசத்திலும் மாவட்டத்திலும் இவ்வாறு உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் வெப்பநிலை அதிகமாக காணப்படும் நபர்கள் நோயாளர் காவு வண்டி ஊடாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொழும்பின் பல பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
