இலங்கை செய்திகள்

கணவன் உயிர் மனைவியால் பறிபோனது

மனைவி செலுத்திய வண்டியில் மோதி காயமடைந்த 42 வயதான கணவர் தெஹிவளை, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகி இருந்த இந்த நபர், அடிக்கடி ஹெரோயினை பயன்படுத்த பணம் கேட்டு, சண்டையிட்டு வந்துள்ளதுடன் நேற்றும் அதே போன்ற சண்டை நடந்துள்ளது.

இது குறித்து கஹாத்துடுவ பொலிஸ் நிலையத்திற்கு மனைவி முறைப்பாடு செய்து விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொல்கஸ்ஹோவிட்ட வெலகும்புர வீதியில் கால்வாய் ஒன்றுக்கு அருகில் மறைத்திருந்த கணவர் காருக்கு முன்னால் பாய்ந்துள்ளார்.

எனினும் காரை நிறுத்தாத மனைவி மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி காரை செலுத்தியுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் காரில் மோதுண்ட கணவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபரின் மனைவியை கஹாத்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கஹாத்துடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எச்.விக்ரமரத்ன தலைமையிலான அணியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

To Top