கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள், தமக்கு அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் நிலையங்களுக்கு (பி.எச்.ஐ) சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த மீன் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு வலியுறித்தியே மேற்படி விடயத்தை இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
