இலங்கை செய்திகள்

மேலும் மேல் மாகாணத்தில் 209 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் சோதனைகளின் போது 209 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணிவரையானப் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகளவானோர்  (92 பேர்) ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 51 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுக்கா 33 பேரும், ஏனைய போதைப்பொருட்களுடன் 20 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 13 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top