இலங்கை செய்திகள்

கம்பஹாவில் ஏற்றுமதி தொழிற்சாலைகளின் செயற்பாட்டிற்கு ஊரடங்கு உத்தரவு தடையாக இருக்காது : சவேந்திர சில்வா

கம்பஹா மாவட்டத்தில் ஏற்றுமதி தொடர்பான தொழிற்சாலைகளின் செயற்பாட்டிற்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தடையாக இருக்காது என்று இராணுவத் தளபதியும், கொரோனாவை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காலத்தில், அத்தகைய நிறுவனங்களின் பணியாளர்கள் தங்களது வேலை செய்யும் இடத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திற்குள் நேற்று இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் திங்கள்கிழமை காலை 5.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் இருப்பினும், கம்பஹா ஊடாக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top