இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்களை நாட்டின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கக் கூடாது. குழுநிலை விவாத்தில் இச்சரத்தில் நீதி அமைச்சர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.
கடந்த ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம். புதிய அரசியலமைப்பொன்றும் புதிய தேர்தல் முறையும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை இந்த காட்டாட்ச்சி சட்டங்களுடன் பயணிக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் எமது கட்சியை சேர்ந்தவர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எமக்குள்ளது. அதனால் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றில் இன்று புதன்கிழமை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
