இலங்கை செய்திகள்

யாழ்.கோப்பாயில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பொது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின் அவர் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளாக்கியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

Most Popular

To Top