இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த சந்தேகநபர்கள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி, நாவலடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது ஆறு கனரக இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

புணாணை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேகநபர்களும் வசமாக சிக்கியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top