இலங்கை செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா, மேலும் 109 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுள் பேலியகொட மீன் சந்தையில் உள்ள 49 பேரும், திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகிய 23 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், மினுவாங்கொட, திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2451ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, 2406 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், 3501 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5920 என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Most Popular

To Top