இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன், ரக்பி போன்ற பல்வேறு சுவட்டு நிகழ்வுகளில் பரீட்சயமானவர் என்பதோடு பதக்கங்களையும் பெற்றிருக்கின்றார்.
2017ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அவர் கொழும்பு வடக்கை பிரநிதித்துவப்படுத்தி அரசியலில் களம் இறங்கியிருந்தார்.
பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து உள்ளூர் அதிகாரத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்காக போட்டியிட்டு 1300 இற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வட்டாரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
பின்னர் நாமலின் கோரிக்கைக்கமைய 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்னி மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
தற்போது அவருக்கு வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் பதவி அமைச்சர் நாமல் ராஜபக்சவால் வழங்கப்பட்டுள்ளது.
