இலங்கை செய்திகள்

கோட்டை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது

கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்ட பின்னர் பணிகள் இடைநிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

கோட்டை பொலிஸ் நிலையத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஏனைய அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் அந்த நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக இன்று காலை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Most Popular

To Top