இலங்கை செய்திகள்

வடக்கில் இதுவரையில் இருபத்தி நான்காயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றியுள்ள ஸார்ப் நிறுவனம்

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் இதுவரையில் 24,641 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பதின்நான்கு இலட்சத்து எழுபத்தொராயிரத்து தொளாயிரத்து பன்னிரண்டு சதுரமீற்றர் பரப்பளவில் (1,471,912) இருந்து இருபத்தி நான்காயிரத்து அறுநூற்று நாற்பத்தொரு (24641) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top