இலங்கை செய்திகள்

தனிமைப்படுதலை நிறைவு செய்து 39 பேர் வீடு திரும்பினார்

கட்டார் மற்றும்  டுபாயிலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு மற்றும்  பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் கட்டார் மற்றும் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில் 39 பேர் அவர்களது சொந்த இடங்களான திருகோணமலை, அம்பாறை மன்னார், பதுளை, காலி  போன்ற பகுதிகளிற்கு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top